உயிரிழந்த 10க்கும் மேற்பட்டோரது குடும்பத்துக்கு தலா 10 லட்சம்: தமிழக அரசு!

Home > தமிழ் news
By |

கஜா புயல் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. உண்டான பலத்த சூறைக்காற்றால் நாகை ரயில் நிலையம் சின்னாபின்னமானது. ரயில் நிலையத்தின் மேற்கூரை, விளம்பர பேனர்கள் சூறைக்காற்றில் சேதமடைந்தன. மேலும் நாகையில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. 

 

கஜா புயல் தாக்கிய பகுதிகளில் தொலைத்தொடர்பு கோபுரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  பட்டுக்கோட்டை மக்களை தொடர்பு கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளதால் உறவினர்கள் தவிக்கவும் செய்கின்றனர்.

 

கஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் உள்ள 421 முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

தஞ்சையை பொறுத்தவரை, மல்லிபட்டினத்தில் 300-க்கும் மேற்பட்ட  விசைப்படகுகள், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் சேதமடைந்துள்ளன. இதேபோல் கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கீழப்பெரம்பையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது, 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. 

 

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மின் துறை அமைச்சர் தங்கமணி நாகை செல்கிறார்.

GAJACYCLONE, TAMILNADU, TNGOVT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS