பட்டாசு வெடிப்பதற்கான அந்த 2 மணி நேரத்தை அறிவித்த தமிழக அரசு!

Home > தமிழ் news
By |

தீபாவளி அன்று தமிழகத்தில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்கிற கணக்கில் மொத்தம் இரண்டு மணி நேரங்கள் பட்டாசுகளை வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

முன்னதாக தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என கூறிய உச்சநீதிமன்றம், அந்த 2 மணி நேரம் எந்த 2 மணி நேரம் என தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது.

 

இதனை அடுத்து தமிழக அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது. எனினும் ஒரு நாள் முழுக்க, அதாவது 24 மணி நேரம் தள்ளி தள்ளி வெடிக்க வெடிக்க வேண்டிய பட்டாசுகளை ஒரு தேசம் முழுவதும் உள்ளவர்கள் தொடர்ந்து 2 மணி நேரத்திற்குள் வெடித்தால் உண்டாகும் மாசு, புகை மண்டலம் மற்றும் நச்சு வாயுக்களின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதும் சந்தேகம்தான்.

 

மேலும் குறைந்த ஒலி மற்றும் குறைந்த மாசுத் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்தப்பட்டுளதோடு, மருத்துவமனைகள்-வழிபாட்டுத் தலங்கள்- அமைதி காக்கப்படும் இடங்கள் போன்றவற்றில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

 

ஆனால் இந்த கட்டுப்பாடு தரையில் வெடிக்கும் வெடிகளுக்குத்தானே அன்றி, வானத்தில் வெடிக்கும் வண்ணமயமான வெடிகளுக்கு அல்ல என்று தீயணைப்புத்துறை டிஜிபி கூறியுள்ளார்.

INDIA, TAMILNADU, SUPREMECOURT, FIRECRACKERS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS