உங்களிடம் இந்த ஆவணம் இருந்தால், அரசின் 1000 ரூபாய் பொங்கல் பரிசை பெறலாம்!

Home > தமிழ் news
By |

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பொங்கலுக்கான ஒரு அதிரடி அரசு பரிசினை அறிவித்துள்ளார். அதன்படி குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும், அட்டை ஒன்றுக்கு தலா ரூ.1000  பொங்கல் பரிசாக  வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


முதலில் உரையாற்றி பேரவை கூட்டத் தொடரை தொடக்கிய பன்வாரிலால் புரோஹித், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்போது இருக்கும் அளவில் இருந்து 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், குறிப்பாக விவசாயிகளின் நலன் கருதி, நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். மேலும் மேகதாதுவில் கட்டப்படும் புதிய அணை தொடர்பான முதல் கட்ட ஆய்வறிக்கை மீதான தனது கண்டனத்தையும் ஆளுநர் பதிவு செய்தார்.


அதன் பின்னர் தனது உரையைத் தொடர்ந்த ஆளுநர், குடும்ப அட்டை ஒன்றுக்கு தலா 1000 ரூபாய் பணம்  பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும், ஆனால் இந்த பொங்கல் பரிசுத் தொகை 1000 ரூபாய்,  இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூர் மாவட்டத்தைத் தவிர்த்த பிற மாவட்டங்களுக்கு வழங்கப்படும் என்றும் பேசியுள்ளார்.

PONGALGIFT, TAMILNADU, PANWARILALPROHIT, TNGOVT, TNPEOPLE, TNFAMILYCARD

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS