ஈரோட்டு, பவானி பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 500 வீடுகளுக்கும் மேல் மூழ்கியுள்ளன. இன்று அவற்றை நேரில் சென்று பார்த்தார், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 

 

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கும் நேரில் சென்றும், ஆற்றுப் பாலத்தில் நின்றபடி வெள்ளப் பெருக்கையும் பார்வையிட்டார். அவருடன் செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் சென்றனர்.

 

முன்னதாக பவானிசாகர் அணையிலிருந்து நீர்திறப்பானது, விநாடிக்கு 65,000 கனஅடியிலிருந்து 40,000 கனஅடியாக குறைக்கப்பட்டிருந்தது. பவானி ஆற்றுக்கு நீர்வரத்து 34,011 கனஅடி, நீர்மட்டம் 115.60 அடி; நீர் இருப்பு 29.19 டி.எம்.சி.,யாக இருந்தது. இருப்பினும் அவற்றால் சேதமடைந்தவற்றை பார்வையிட்ட முதல்வர்,  இன்னும் தண்ணீர் முழுமையாக வடியவில்லை. வடிந்த பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான அடுக்குமாடிக் குடியிருப்புகள், பாதுகாப்பான இடத்தில் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

 

மேலும் பவானி தான் படித்து வளர்ந்த இடம், அதில் எங்கெங்கு வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட சேதங்கள் வரும் என்று நன்றாக தனக்குத் தெரியும் என்றும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS