கஜா புயல் பாதித்த பகுதிகளை இன்று பார்வையிடும் தமிழக முதல்வர்!
Home > தமிழ் newsகஜா புயல் பாதிப்புகளை பார்வையிட சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மேலும் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார்.
தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும், மீனவர்கள் குடும்பத்துக்கும் உடனடியாக 5000 ரூபாய் வழங்க உத்தரவிட்டு நிதி ஒதுக்கியுள்ள முதலமைச்சர், பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒட்டுமொத்த நிதியாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
முன்னதாக தமிழகத்தின் நாகை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை கடந்த 16-ம் தேதி கஜா புயல் கடுமையாக தாக்கியதை அடுத்து ஏறக்குறைய 1.7 லட்சம் மரங்கள், 45 பேர் உயிரிழப்பு என இயற்கையும் மனிதர்களும் கஜா புயலால் சூறையாடப்பட்ட துயரங்கள் ஏராளம்.
இதில் எஞ்சியவர்களை முகாம்களிலும், காயம் பட்டவர்களுக்கு நிவாரணங்களும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சமும் அறிவித்திருந்த நிலையில் கஜா புயலால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொள்கிறார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவின் திறப்பு விழாவுக்கு தடை: உயர் நீதிமன்றம்!
- 'ஊருக்கே சோறு போட்ட உங்களுக்கு நான் துணை நிற்பேன்'...ட்விட்டரில் உருகிய பிரபல கிரிக்கெட் வீரர்!
- 'அடுத்த 24 மணி நேரத்தில்'...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்!
- கஜா புயலால் பாதிப்படைந்த இந்த மாவட்டங்களில் 'மதுக்கடைகளை' திறக்கக்கூடாது!
- Watch Video: 'சென்னை மட்டும் தமிழகம் அல்ல'.. எங்களையும் கொஞ்சம் கவனிங்க!
- இந்த மாவட்டங்களில் 'பள்ளி,கல்லூரிகளுக்கு' நாளை விடுமுறை
- கஜா புயலுக்கு பின் அடுத்து 3 நாட்களுக்கு மழை: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
- ஓசூர் காதல் தம்பதி ஆணவப்படுகொலை வழக்கில் போலீசார் தனிப்படை!
- ‘கஜா’ புயல்: பாதிப்பை காண காலதாமதமாக வந்த வட்டாட்சியர் வாகனத்தை கொளுத்திய பொதுமக்கள்?
- 'தமிழகத்தை கடந்து விட்டதா கஜா’ புயல்'...தற்போதைய நிலை என்ன?தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!