சென்னையில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார் தமிழிசை.
சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் “ஒரு நிமிஷம் அக்கா, பெட்ரோல் விலை ஏன் உயர்கிறது” என்று தமிழிசையை நோக்கி கேள்வி எழுப்பினார்.ஆனால் அவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் செய்தியாளர்களை பார்த்துக் கொண்டிருந்த தமிழிசை சிரித்துக் கொண்டே பேட்டியை தொடர்ந்தார். ஆனால், தமிழிசைக்குப் பின்னால் இருந்த பாஜகவினர் உடனடியாக அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து வெளியே தள்ளினர்.இதனால் அந்த இடத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை அந்த ஆட்டோ ஓட்டுநர் கதிரின் வீட்டிற்கு சென்ற தமிழிசை அவரிடம் நலம் விசாரித்தார்.மேலும் ஆட்டோ டிரைவர் கதிருக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- சட்டத்தை மதிக்காதது உட்பட.. 8 பிரிவுகளின் கீழ் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு!
- 'ஊழலில் ஈடுபட்டதால்தான் மக்கள் காங்கிரஸை ஒதுக்கினர்': மோடி!
- 'பெட்ரோல் விலை உயர்வைத் தடுக்க'... செலவை குறைத்துக் கொள்ளுங்கள்!
- PM Modi to unveil world's tallest statue of this legend in October
- "BJP will rule for another 50 years": Amit Shah
- பேருந்துகள்; தியேட்டர்கள் இயங்கவில்லை: புதுச்சேரி-பெங்களூருவில் ’பாரத் பந்த்’ தீவிரம்!
- DMK Hits Out At Centre; Accuses It Of Running 'Electoral Dictatorship'
- சோபியாவுக்கு தண்டனை பெற்றுத்தரும் எண்ணம் கிடையாது: தமிழிசை!
- தமிழிசை பாதிக்கப்பட்டதுபோல் எந்த கட்சி தலைவருக்கு நேர்ந்திருந்தாலும் நடவடிக்கை.. அமைச்சர்!
- இளைஞர்களுக்காக பெண்களை கடத்துவேன் என்று பேசிய பாஜக எம்.எல்.ஏ-வின் நாக்கை துண்டித்தால் 5 லட்சம் பரிசு!