‘தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரம் என அவர் கூறியதை மறுக்கவோ எதிர்க்கவோ மாட்டேன்’!

Home > தமிழ் news
By |

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், ‘2016-ல் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதால், தீவிரவாதிகள் மீது துல்லிய தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஆனால் மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது, பாகிஸ்தான் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றும் கூறினார். மேலும் தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறும் கருத்துக்களை எதிர்க்கவோ, மறுக்கவோ முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.


மேலும் தமிழகத்தில் பாதுகாப்பு தொழிற்பூங்கா அமைக்கும் பணிக்கான முதலீடுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த நடைமுறைகளைத்தான் பின்பற்றியதாகவும்,

டஸ்ஸால்ட்- HAL நிறுவனங்கள் இடையே எந்த ஒப்பந்தமும் போட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


BJP, RAFALEDEAL, PONRADHAKRISHNAN, TAMILNADU, NIRMALASITHARAMAN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS