இயற்கை விவசாயத்தின் காதலன் நெல் ஜெயராமன் மறைவு!
Home > தமிழ் newsஇயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று (டிச. 6) காலை காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதான நெல்ஜெயராமன் சிகிச்சை பலனின்றி காலமானார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த, கட்டிமேடு கிராமத்தில், பிறந்த இவர், நம்மாழ்வாரிடம் இயற்கை விவசாயத்துக்கான பயிற்சி பெற்ற இளைஞர் குழுவில் முக்கியமானவர். இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொண்டு வந்ததோடு, பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றியமைக்காக மத்திய, மாநில அரசுகளின் விருது பெற்றவர்.
பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்கிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமன் 150க்கும் மேற்பட்ட அரியவகை நெல் விதைகளை சேகரித்தார். 2006-ஆம் ஆண்டு தொடங்கி வருடாவருடம் புகழ்பெற்ற நெல் திருவிழாவை நடத்தியவர்.
கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதியுற்று வந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்தவர் இன்று ( டிச. 6) காலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குக்காக சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.
முன்னதாக நடிகர்கள் சத்யராஜ், சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர். அவர்களில் சிலர் நெல் ஜெயராமனின் மருத்துவ செலவையும் ஏற்றனர். இதேபோல் தமிழக அரசு சார்பில் அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் சந்தித்து நெல் ஜெயராமனின் மருத்துவ செலவுக்கு உதவி செய்திருந்தனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- தாமரை மலர சூரிய சக்தி தேவையா? தேவையில்லையா?: ட்ரெண்டிங்கில் ஸ்டாலின் - தமிழிசை ட்விட்டர் பஞ்ச்’கள்!
- உன் 'சிம்மக்குரலில்' என்னை அழைக்க மாட்டாயா?.. வீடியோ உள்ளே!
- ’வெளியூர் சென்று குடிக்க இலவச பஸ் பாஸ் கேட்டு‘..கலெக்டரிடம் மனு கொடுத்த நபர்!
- காதல் மனைவியுடன் சேர்ந்து முதலாளியை குடும்பத்தோடு கொன்றுவிட்டு தப்பிய வேலைக்காரர்!
- கொலுசு சத்தம் பசங்க மனச பாதிக்குதா?: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
- பேட்டி அளித்தபோது கண்ணீர் விட்டு அழுத கலெக்டர் ரோகிணி.. காரணம் இதுதான்!
- ‘ஓடும் பேருந்தில், இளம் பெண் முன் இளைஞர் செய்த காரியம்’.. சின்மயி கண்டனம்!
- தமிழ் மொழி மீதான காதலால் அமெரிக்க பெண் எடுத்த முக்கிய முடிவு.. வைரலாகும் புகைப்படங்கள்!
- 'என்கூட பேச மாட்டியா மெர்சி?’: டீக்கடையில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்..வீடியோ!
- ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடியது ஏற்றுக்கொள்ள முடியாதது’.. டெல்லி பசுமை தீர்ப்பாயம் அதிரடி!