’இனிமே டிக்-டாக்கில் இந்த 100 விஷயங்கள பண்ண முடியாது’..கடுமையான புதிய விதிகள்!

Home > தமிழ் news
By |

பேஸ்புக், வாட்ஸ் ஆப் செயலிகளுக்கு பிறகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது டிக்டாக் செயலி.

ஆடல்- பாடல் போன்ற, உள்வள திறமைகளை வெளிப்படுத்த பலருக்கும் வாய்ப்பளித்த இந்த செயலி, பின்னர் ஆபாச வார்த்தைகளுக்கும் அரைகுறை ஆடைகளுக்கும் இடம் கொடுக்கச் செய்தது. வியாசர்பாடி அபிராமியின் விவகாரம், விமர்சனத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த கலையரசன், ஆப்பிலேயே பாதி நேரத்தை செலவழித்த பெண் ஆசிரியை உள்ளிட்ட பலரும் இதுபோன்ற செயலிகளால் சீரழிந்தனர்.

தவிர கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டவர், ஆபாசமான பாடல் வரிகளுக்கு நடனமாடும் குடும்ப பெண்கள் என கலாச்சார சீரழிவுகளை இத்தகைய ஆப்கள் உண்டாக்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது ஒருபுறம் தொடர்ந்தது.

இந்த நிலையில், ஆபாச உடை, பேச்சு, மதம்-பிரிவினை-சாதீய கருத்துக்கள் மற்றும் இன வெறி தூண்டுதல்கள், தைவான் விடுதலை கருத்துக்கள், கம்யூனிஸ உரைகள்- உடைகள் உள்ளிட்ட 100 விஷயங்களுக்கு கண்காணிப்பு மற்றும் ஒழுங்கும்முறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டிக்டாக் செயலிக்கு 150 மில்லியன் பயனாளர்கள் சீனாவில் இருப்பதுபோல, இந்தியாவிலும் பலர் அடிமைகளாகியுள்ளதால் இந்த கட்டுப்பாடுகள் அவசியம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர்.

TIKTOK, APP, ANDROID, CHINA, INDIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS