போலீஸ் ஸ்டேஷன் முன் டப்ஸ்மாஷ் சேட்டை.. ‘டிக் டாக்’ இளைஞர்களுக்கு வந்த சோதனை!

Home > தமிழ் news
By |

போலீஸ் ஸ்டேஷனின் வாசல்படியை மிதிக்கும்போது காவல்துறையை அவமானம் செய்யும்படியாக டப்ஸ்மாஷ் செய்த 4 இளைஞர்கள் மீது சிவகாசி காவல்துறையினர் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குருமதன், தங்கேஸ்வரன், முருகேசன், ஈஸ்வரன் ஆகிய நால்வரும் மறைந்த அரசியல்வாதி பசுபதி பாண்டியனின் நினைவு தினத்தை முன்னிட்டு வாகன பேரணிக்கு அனுமதி கேட்பதற்காக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

அப்போது வாசலில் நின்றபடி இந்த 4 இளைஞர்களும், சிறுத்தை படத்தில் போலீஸாக வரும் கார்த்தி, வில்லனின் வீட்டுக்குள் நுழையும்போது வாசலில் நின்று, ‘இந்த வீட்டுக்குள்ள போறதுக்கு இடது காலத்தான் வெக்கனும்’என்று பேசும் வசனத்தை வைத்து  டிக்டாக்செயலி மூலம் டப்ஸ்மாஷ் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து, சேட்டை பண்ணியுள்ளனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் தொழில்நுட்பத்தை சமூக நோக்கில் தவறாக உபயோகப்படுத்துதல், பிற மனிதர்களின் சுயமரியாதையை கீழ்த்தரப்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ்,  இந்த டிக்டாக் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

TIKTOK, COPS, FIR, POLICE, ACTIVITIES, POLICESTATION, APP, SIVAKASI, BUZZ

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS