‘டிக் டாக் தடையா?’..அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிக் டாக் நிறுவனம்!

Home > News Shots > தமிழ் news
By |

டிக் டாக் தடை தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து, டிக் டாக் நிறுவனம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிக் டாக் செயலியை பயன்படுத்தி ஆபாசமான முறையில் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பலரும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்களை கேலி செய்யும் விதமாக வீடியோக்கள் வந்த வண்ணம் இருந்தன. இதற்கு பலதரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தன.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக சட்டமன்ற பட்ஜெட் மீதான விவாதத்தின் போது எம்.எல்.ஏ, தமீமுன் அன்சாரி, டிக் டாக் செயலில் ஆபாசமான முறையில் வீடியோக்களை பதிவிடுவதால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி, டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், ப்ளூவேல் கேமை தடை செய்தது போல் டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்தார்.

இதனை அடுத்து, பாதுகாப்பான பொழுதுபோக்கு சேவையாக டிக் டாக செயலி இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிக் டாக் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் எங்கள் விதிமுறைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்களை மீறும் வீடியோக்கள் குறித்து புகார் அளிக்கும் வகையில் ஒரு புதிய சேவை அறிமுகம் செய்யப்படும் என டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

TIKTOK, TAMILNADU, RULES

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES