கஜா புயல்: சாப்பிட கூட நேரமின்றி இந்த ஊழியர் செய்யும் வேலைய பாத்தா சல்யூட் அடிப்பீங்க!

Home > தமிழ் news
By |

தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயலால், டெல்டா மாவட்டங்களில் பலரும் தங்கள் ஊயிருடைமைகளை இழந்து நிற்கதியாகியுள்ளனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தன்னலமற்ற தனிமனிதர்களும் தங்கள் நிவாரண நிதிகளைத் திரட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். 

 

எனினும் பணத் தேவையைத் தாண்டி, மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் உள்ளிட்ட பலவற்றுக்கும் மின்சாரமே பிரதானமாக இருக்கிறது. எனவே ஊரக அல்லது கிராம புறங்களில் குடிநீருக்கு நிலத்தடி நீர் மற்றும் பம்ப் செட்டுகளை நம்பியிருக்கும் மக்களுக்காக இரவு பகல் பாராது மின் ஊழியர்கள், கஜா புயலில் செயல்படாமல் அறுந்து விழுந்த மின் கம்பங்களை சரிசெய்து வருகின்றனர். 

 

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் மின் கம்பத்தை சரி செய்யும் மின் ஊழியர் ஒருவர், வயல் வெளியில் மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, சாப்பிட கூட நேரமில்லாமல் உயரமான அந்த மின் கம்பத்தில் அமர்ந்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருக்குமாறு உள்ள புகைப்படம் இணையத்தில் படுவைரலாகி வலம் வருகிறது.

GAJACYCLONE, TAMILNADU, TNEBEMPLOYEE, SINCERE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS