தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை, நீண்ட போராட்டத்துக்கு பின் தமிழக அரசால் மூடச்சொல்லி அரசாணை பிறப்பிக்கப்பட்டு மூடி, சீல் வைக்கப்பட்டுள்ளது.எனினும் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக, இதன் தலைமையான வேதாந்தா நிறுவனம், டெல்லியில் இருக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. 


அதன் பின்னர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான அருண் அகர்வால் என்பவரின் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலை மீதான குற்றப் புகார்கள், சந்தேகங்கள் முதலானவற்றை தீர்க்கும் வகையிலும், வேதாந்தா நிறுவனத்தின் மறுபரிசீலனை மனுவின் பேரிலும் ஆய்வுச் செய்ய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த குழு அளிக்கும் அறிக்கை என்னவோ, அதன் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் தொடர்பான அடுத்தகட்ட  நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.


இந்நிலையில் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான இந்த ஆய்வுக்குழு  வருகிற செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு முறையாகவும் தொடர்ந்தும் ஸ்டெர்லைட் ஆலை  குறித்த மேற்கண்ட ஆய்வுகளை செய்யவுள்ளதாக  தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையத்திடம் இருந்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS