‘உனக்கெல்லாம் பயிற்சி கொடுக்க முடியாது’ என்று சொன்ன கோச்.. ‘கிளார்க்’ தந்தை மகளுக்காக செய்த காரியம்!

Home > தமிழ் news
By |

ஜெய்ப்பூரை சேர்ந்த கிளார்க் ஒருவர் தன் மகளின் கிரிக்கெட் ஆசைக்காக ஒரு மைதானத்தையே வாங்கிக் கொடுத்துள்ளதும், அந்த பெண்’தான் பின்னாளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார் என்கிற உண்மையும் தற்போது வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மத்திய அரசின் சர்வே துறையில் கிளார்க் பணியாளராக இருக்கும் சுரேந்திராவின் மகள் பிரியா புனியா என்பவர் டெல்லியில் படித்து வளர்ந்தவர்.


அடிப்படையில் பேட்மிண்டனில் ஆர்வம் கொண்ட பிரியா புனியா மிகவும் திறமையாக பேட்மிண்டன் விளையாடுபவர்.  ஆனால் கிரிக்கெட் விளையாட வேண்டி ஒரு பயிற்சியாளரிடம் சென்றபோது அப்பெண்ணுக்கு பயிற்சி அளிக்க முடியாது என்று பயிற்சியாளர் சொன்னதாகவும் அவமானப் படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இதனால் அதிருப்தி அடைந்த புனியாவின் தந்தை மகளுக்காக தன் சொத்துக்களை விற்று, கடன் வாங்கி ரூ. 22 லட்சம் மதிப்பில் ஜெய்ப்பூரில் தன் மகள் விளையாடுவதற்கான ஒரு மைதானத்தையே அமைத்து தந்துள்ளார். அதன் பிறகு விடாமுயற்சியால் 2010-ம் ஆண்டில் தீவிர பயிற்சி பெறத் தொடங்கிய பிரியா 2015-ஆம் ஆண்டு, தேசிய அளவிலான போட்டியில் 42 பந்துகளுக்கு 95 ரன்கள் எடுத்து இந்திய மகளிர் ஏ அணியில் இடம் பிடித்து நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிராக விளையாண்டு அதிக ரன்களை ஸ்கோர் செய்தார்.


அந்த முயற்சிதான் அவரை வரும் ஜனவரியில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய மகளிர் அணி விளையாடவுள்ள டி20 போட்டியில் பிரியா புனியாவை இடம் பிடிக்க வைத்துள்ளது.

TEAMINDIA, T20, BCCI, WOMENSCRICKET, PRIYA PUNIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS