2.O படத்தோட 'கிளைமாக்ஸ்' இப்படித்தான் இருக்குமாம்!

Home > தமிழ் news
By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் 2.O திரைப்படம் வருகின்ற 29-ம் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 10,000 அரங்குகளில் இப்படம் வெளியாகி புதிய சாதனை படைக்கவுள்ளது.மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தினை உலகம் முழுவதுமே, ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

 

இந்தநிலையில் இந்தியாவின் 'பிரமாண்ட இயக்குநர்' ஷங்கர் நமது தளத்திற்கு அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டியில் 2.O படம் குறித்த பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

 

குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் குறித்து அவர் கூறுகையில்,''இண்டெர்வெல் முடிஞ்சு ஒரு 20 நிமிஷம் கழிச்சு கிளைமேக்ஸ் ஸ்டார்ட் ஆகிடும். ஏன்னா அதுல அவ்ளோ விஷயம் இருக்கு. எங்க கிளைமாக்ஸ் ஆரம்பிச்சுதுனே உங்களால சொல்ல முடியாது. நீங்க குறிப்பிட்டு சொல்லணும்னா அந்த ஸ்டேடியம் சொல்லலாம். இதுல ரஜினி,அக்ஷய் குமார் இருக்கறதால கிளைமேக்ஸ் டபுள் டிரீட்டா இருக்கும்,'' என்றார்.

 

இயக்குநர் ஷங்கரின் விரிவான பேட்டியினை காண லிங்கை கிளிக் செய்யவும்...

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS