மோடி சிலையை கோவிலுக்குள் வைத்து, கடவுளாக வழிபடும் விநோத கிராமம்!

Home > தமிழ் news
By |

பீஹாரின் பாட்னா பகுதியில் உள்ளது கட்டிஹார் எனும் கிராமம். இங்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவச்சிலையை கோவிலுக்குள் கொண்டு சென்று வைத்து மக்கள் கடவுளாக வழிபட்டு வரும் அதிசயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

ஆங்காங்கே தேங்கிய குளம், குட்டைகள் என வளர்ச்சியடையாத  கிராமமாகவே இருந்தாலும் இங்கு எந்நேரமும் மின்சார வசதியினை செய்து தரப்பட்டுள்ளதால் இம்மக்கள் மோடியை வெறும் பிரதமராக பார்க்காமல், அதுக்கும் மேல் கடவுளாக, இன்னும் சொல்லப் போனால் வளர்ச்சியின் கடவுளாக வழிபடுகின்றனர். 

 

இதற்கென இம்மக்கள் கும்பிடும் ஹனுமர் கோவிலுக்குள் மோடியின் சிலையை வைத்து வழிபடவும் செய்கின்றனர். மேலும் தொடர்ந்து பல வளர்ச்சித் திட்டங்களை வளர்ச்சியின் கடவுள் மோடி தங்களுக்கு செய்வார் எனவும் நம்புகின்றனர். எனினும் உருவச் சிலையானது மோடியை துல்லியமாக அச்சில் வார்த்தது போல் இல்லை என்கிற கருத்துக்களும் எழுந்துள்ளன.  

BJP, NARENDRAMODI, GODOFDEVELOPMENT, BIHARPEOPLES

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS