‘இவன் இல்லன்னா.. நான் இல்ல’.. பல்கலைக்கழக பட்டம் பெற்ற வளர்ப்பு நாய்!
Home > தமிழ் newsநியூயாரிக்கின் கிளார்க்ஸன் பல்கலைக் கழகத்தில் பட்டயப் படிப்புக்கான நிறைவுச் சான்றிதழை பெற்ற பிரிட்டனி ஹாவ்லே என்கிற இளம் வயது பெண், தான் வளர்த்த செல்லப் பிராணியான நாய்க்கும் அதே பட்டமளிப்பு விழாவில் பட்டம் வாங்கித் தந்துள்ளார்.
தன்னுடைய 16-ஆம் வயதில் காம்ப்ளக்ஸ் ரீஜனல் நோய்க்குறித் தொற்றினால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாமல் வீல் சேரில் பயணிக்கத் தொடங்கிய பிரிட்டனி ஹாவ்லேவுக்கு கடந்த இரண்டறை வருடங்களாக, வகுப்பறைகள், பாடவேளைகள், ஆய்வுக்கூடங்கள் தொடங்கி, இயல்பு வாழ்க்கைக்கான ஒவ்வொரு அணுவும் அசைவும் அவர் வளர்க்கும் 4 வயதான கிரிஃபித் ஹாவ்லே என்கிற நாய் இல்லாமல் நிகழ்ந்ததில்லை.
சொல்லப்போனால் தன் செல்லப் பிராணியான கிரிஃபித் இல்லை என்றால், தான் இந்த படிப்பே பயின்று முடித்திருக்க முடியாது என்று நெகிழ்ந்துள்ளார். பிரிட்டனைப் போலவே 100 சதவீதம் வருகைக்காகவும், தன்னுடைய கடின உழைப்பு மற்றும் விஸ்வாசத்துக்காகவும் கிரிஃபித்துக்கு(நாய்) வாழ்த்து சான்றிதழ் கொடுக்கப்பட்டு பட்டமளிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய அடுத்த கட்ட வாழ்க்கை அனுபவங்களையும், கிரிஃபித்தின் துணையாடு சந்திக்கவிருக்கும் உற்சாகத்தில் இருக்கும் பிரிட்டனிடம், நன்றியுடனும் நேசத்துடனும் வாலாட்டியபடி குழைந்து அடைந்து அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளும் வளர்ப்பு நாயான கிரிஃபித்தினை பற்றி பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- அடுத்த 14 வருஷத்துக்கு கிறிஸ்துமஸ் கிஃப்ட்.. பக்கத்துவீட்டு தாத்தாவின் பேரன்பு!
- ‘இதென்னடா காருக்கு வந்த சோதனை’.. பெட்ரோல் பங்கில் பெண் செய்த வைரல் காரியம்!
- WATCH | Rare 'Fish Rain' Witnessed In Andhra Pradesh As Cyclone Phethai Hits State
- 'Thief' Steals Car, Returns It To Owner With Full Tank Of Petrol
- சாக்ஸை நுகர்ந்து பார்த்தவருக்கு நேர்ந்த கொடூர கதி.. அப்படி என்ன நடந்தது?
- ‘அதுக்கு மொதல்ல நீங்க பேட்டிங் பண்ணனும் பெரிய தல’.. வார்த்தைகளால் மோதிய கேப்டன்கள்!
- Activists Strip Naked, Smear Blood On Their Body To Protest Against Animal Cruelty
- MS Dhoni Helps Wife Sakshi Put On Shoes & Fans Are Getting All Fuzzy Over His Humility
- ‘கேட்சுகளை கச்சிதமாக கவ்வுகிறீர்கள் போங்கள்’.. வைரலாகும் கோலி கேட்ச்!
- Homeless Man's Friendly Canines Wait Patiently Outside Hospital For His Safe Return