கருணாநிதியின் நினைவிடம் நோக்கி தன் மகனுடனும், பல்வேறு தொண்டர்களுடனும் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகில் இருந்து மு,க.அழகிரியின் பேரணி தொடங்கியது. இறுதியில் கருணாநிதியின் நினைவிடத்தை அடைந்தார் மு.க.அழகிரி.

 

தனக்கு ஆதரவு தந்த  தொண்டர்களுக்கும் தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களுக்கும் நன்றி சொல்லிய, மு.க.அழகிரி ‘இது கலைஞருக்கு அஞ்சலி செலுதும் பேரணிதான்.. வேறு எந்த நோக்கமும் இல்லை’ என்று திட்டவட்டமாக கூறினார்.

 

மேலும் தனக்கு ஆதரவளித்தவர்களை எல்லாம் திமுக தலைமையானது, அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்க வேண்டுமென்றால், ஒன்றரை லட்சம் தொண்டர்களை நீக்க வேண்டும், அவர்கள் செய்வார்களா? என்றும் பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றிற்கு மு.க.அழகிரி பதிலளித்தார்.

 

BY SIVA SANKAR | SEP 5, 2018 1:27 PM #MKSTALIN #DMK #MKARUNANIDHI #MKAZHAGIRI #AZHAGIRIRALLY #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS