நமது நம்பரை நமது செல்போன்களில் நம் அனுமதியின்றி  யார்தான் பதிவு செய்ய முடியும் என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளன.  பிரான்சின் இணைய பாதுகாப்பு வல்லுநர் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் எலியட் அல்டர்சன் இதனை பேடிஎம் எனும் இணைய வங்கி சேவைக்கான செயலி இதனை செய்திருக்கலாம் என்று சொல்லி சர்ச்சையை கிளப்பினார்.  ஆனால் உண்மையில் ஹேக்கர்களைத் தவிர்த்து, குறிப்பிட்ட நான்கு பேரால் நேரடியாக நம் செல்போன்களை அனுமதி இன்றி காணவும் இயக்கவும் முடியும் என்கிற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

 

யார் அந்த நால்வர்?

 

1. நமக்கு மொபைல் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்கள், இவற்றால் USSD எனப்படும் ‘அமைப்பு சாரா இணைப்புகளுக்கான சேவை தரவகம்’ மூலம் ஒரு புதிய போன் நம்பரை நம் மொபைலில் பதிவு செய்ய முடியும். இப்படித்தான் பெரிய சிம்கார்டு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் மொபைலில் அவசர உதவி எண், தீயணைப்புத் துறை எண், காவல் துறை உதவி எண் முதலானவற்றை பதிவு செய்கின்றனர். இது மொபைல் போன்களுக்கான குளோபல் சிஸ்டம் (GSM) விதிகளின் கீழ் இருக்க வேண்டியது அவசியம்.

 

2.மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களால் இதே முறையில் தாங்கள் விருப்பப்பட்ட எண்களை, நம் மொபைல் போன்களில் பதிவு செய்ய முடியும்.

 

3.அடுத்து, நம் மொபைலில் இருக்கும் ஆண்ட்ராய்டு, சிம்பியன் போன்ற மொபைல் போன் இயங்குதள (Operating System) நிறுவனங்களால் நம் மொபைல்களில் எந்த எண்ணை வேண்டுமானாலும் சேர்க்கவோ, நீக்கவோ முடியும். எனினும் தொழில்தர்மம் கருதி விட்டுவைத்திருக்கின்றனர். அப்படித்தான் ஆதார் சேவை எண் மொபைலில் பதிவானதாக  கூகுள் அறிவித்துள்ளது. அதே சமயம் இதனை இந்திய நிறுவனங்கள் செய்திருக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறது.

 

4.இறுதியாக, ஆப்ஸ் எனப்படும் செயலிகள். இன்று நாம் எல்லாவற்றுக்கும் செயலிகளையே நம்பி இருக்கிறோம். ஆனால் இந்த செயலிகளை தரவிறக்கம் செய்யும்போது, நம் செல்போனில் இருக்கும் ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், டாக்குமெண்ட்ஸ் என எல்லாவற்றையும் பார்க்க, படிக்க அனுமதி தருமாறும்  அதற்கு ஓகே என்றால் தன்னை இன்ஸ்டால் செய்துகொள்ளுமாறும் நிபந்தனை வைக்கும். நாமும் கொடுத்தாக வேண்டும். வேறு வழி?

BY SIVA SANKAR | AUG 4, 2018 12:40 PM #GOOGLE #AADHAAR #HACKING #GSM #USSD #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS