ஆட்டோமொபைல் துறை பலதரப்பட்ட பரிமாணங்களைத் தாண்டி வந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, பெருகி வரும் சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிகரிக்கும் அந்நியச் செலவாணி ஆகிய காரணங்களால் பேட்டரி வாகனங்களை சந்தைப்படுத்துவதும், அவற்றை புழக்கத்துக்கு கொண்டுவருவதும் தாமதப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

 

எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2016) மத்திய எரிசக்தி, நிலக்கரி மற்றும் மரபு சாரா எரிசக்தித் துறை அமைச்சர் பியுஷ் கோயல், வரும் 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களையும்  பேட்டரி வாகனங்களாக மற்றக்கூடிய திட்டத்தை அறிவித்திருந்தார். இது தொடர்பாக புளூபெர்க் நியூ எனர்ஜி ஃபைனான்ஸ் என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, அனைத்து வாகனங்களையும் பேட்டரி வாகனங்களாக மாற்றினாலும் 2030-ம் ஆண்டுக்குள் 7% வாகனங்களை மட்டுமே பயன்பாட்டுக்குக் கொண்டு வரமுடியும். மீறி கொண்டு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2040-ம் ஆண்டில்  27% மட்டுமே பயன்பாட்டுக்கு வரமுடியும் என்று கூறப்படுகிறது.

 

காரணம் பேட்டரி சார்ஜ் செய்வதற்கான பேட்டரி சார்ஜ் மையங்கள். மின்சார வாரியத்தின் ஆலோசனைகளுடன் பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜ் மையங்களுக்கு பெரும் முதலீடும், அதற்கான அமைப்பும் தேவை. சீனாவைப் பொருத்தவரை இதற்கான முழு மானிய திட்டக் கொள்கையையும் 2015-ம் ஆண்டிலேயே  அறிமுகப்படுத்தியது.

 

ஆனால், தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு அண்மையில் எடுத்திருக்கும் முடிவுகள், இந்த பேட்டரி வாகனங்களை சாத்தியப்படுத்தும் நம்பிக்கையை ஊட்டியிருப்பதாக வாகன உலகம் நம்புகிறது. இதெற்கென மே 2019-ல் இருந்து  இந்திய நிறுவனங்கள் தெர்மல் பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கான முயற்சியில் இருக்கின்றன.

 

இதுபற்றி பாரத் ஆற்றல் வளத் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் பிவிஎஸ் பிரகாஷ்கூறுகையில், ஏறக்குறைய இந்திய மதிப்பில் 6.6 பில்லியன் ரூபாய் செலவில், ஏழெட்டு மாதங்களில் ஆந்திரப் பிரதேசத்தில் வருடத்துக்கு 1000 மெகா வாட் ஆற்றலை உற்பத்தி செய்யவிருக்கும் இந்தத் திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் கணிசமான கார்பன் உற்பத்தியைக் குறைத்து சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் என்கிறார்.

 

சுமார் 3000 பேருக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கவுள்ள இந்தத் திட்டத்தில் தென்கொரியாவின் கியா மோட்டர்ஸ் நிறுவனமும், முக்கிய பங்குதாரராக 1.1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளதால் விரைவில் பேட்டரி வாகனங்களின் புழக்கத்தை நம்மூர்களில்  காண்பதற்கான வாய்ப்புள்ளது.

BY SIVA SANKAR | AUG 7, 2018 11:44 AM #BATTERYCARS #INDIA #THERMALENEGRY #BEST #ANDHRAPRADESH #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS