சமீப நாட்களாக வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது பற்றிய தகவல்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை உருவாக்கி வருகின்றன. திருப்பூரைச் சேர்ந்த கார்த்திகேயன் தன் மனைவிக்கு யூ டியூபின் உதவியுடன் பிரசவம் பார்த்ததால் அந்த பெண் இறந்து போன செய்தியைத் தொடர்ந்து சுகப்பிரசவத்துக்கான பயிற்சியை அளிக்கவிருந்த ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார். ஒருபுறம் அலோபதி மருத்துவமனைகளின் திட்டமிட்ட செயல்களாகவும் இந்த கைது சம்பவம், சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 

ஆனால் தற்போது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தன் மனைவி மகாலட்சுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலேயே மனைவிக்கு சுகப்பிரசவம் பார்த்த கண்ணனுக்கு 3.15 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அறிந்த ஆரம்ப சுகாதார செவிலியர்கள் போடி வட்டாட்சியருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் கொடுக்க, மாவட்ட பொது சுகாதார இணை இயக்குனர் உள்ளிட்ட அனைவரும் கண்ணன் வீட்டிற்கு விரைந்தனர்.

 

ஆனால் கண்ணனோ, யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. மேலும், தன் மனைவியும் குழந்தையும் நலமாக உள்ளதால், ’அலோபதியின் பெயரைச் சொல்லி யாரும் மருத்துவம் பார்க்க வரவேண்டாம், இது என் வீடு, அவர் என் மனைவி’ என்று கடுமையாக கூறி கதவைச் சாத்தினார்.தொடர் போராட்டங்களுக்குப்பின் அவரது மனைவி மற்றும் குழந்தை இருவரும் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

ஒரு காலத்தில் சுகப்பிரசவம் என்பது சாதாரண ஒன்று. இன்று அது கொலைக்குற்றம் என்னும் அளவிற்கு பார்க்கப்படுவதற்குக் காரணம், அதற்கான முறையான பயிற்சி பெற்ற அனுபவம் மிக்க பெண்கள் இல்லாததே. மாறிவரும் உணவுப் பழக்கங்களாலும், உடலமைப்பினாலும் ஆங்கில மருத்துவத்தை மக்கள் நாடுகின்றனர். ஆனால் பரிசோதனை முயற்சிகளால் உயிரிழப்பு நிகழ்வதை அனுமதி முடியாது என்பதால் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என, தமிழக அரசின் சுகாதாரத் துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

BY SIVA SANKAR | AUG 4, 2018 1:28 PM #HOMEBIRTHATTEMPT #TAMILNADU #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS