சபரிமலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இந்து மல்கோத்ராவின் மாற்றுக்கருத்து!

Home > தமிழ் news
By |

கேரளா சபரிமலையில் உள்ள கோவில்களுக்குள் அனைத்து பெண்களும் செல்வதற்கு இருந்த தடையை நீக்கி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெண்களின் மத வழிபாட்டு உரிமையை மறுப்பதால், இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டிருந்தது.


ஆனால் இவ்வழக்கு பற்றி மேற்கண்ட நீதிமன்ற அமர்வுக்குழுவில் இருந்த நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாற்றுக்கருத்தினை தெரிவித்து இதே தீர்ப்பினை வழிமொழிந்தார்.  அதன்படி, மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட இவ்வழக்கில் மதச்சார்பற்றத் தன்மையை நிலைநாட்டும் விதமாகவே இருந்தாலும்; தடை செய்யப்பட வேண்டியதா இல்லையா என்பன போன்ற மத நம்பிக்கை தொடர்பானவற்றில் நீதிமன்றம் தலையிடக் கூடாது.


உடன்கட்டை ஏறுதல் அல்லது சதி போன்ற மூர்க்கமான கட்டாயச் சடங்குகளில் இருந்து தனிமனித உரிமையை காக்கும் விதமாக வேண்டுமானால் நீதிமன்றம் தலையிடலாம். இந்த வழக்கில் நீதிமன்றம் எடுக்கும் முடிவு பல்வேறு வகையில் விளைவுகளை உண்டுசெய்யும் என்றும் கூறி, மேற்கண்ட, ‘பெண்களை கோவிலுக்குள் அனுமதி செய்ய தடை இல்லை’ என்கிற தீர்ப்பை எழுதினார்.

KERALA, SABAIMALAVERDICT, SABARIMALATEMPLE, RIGHTTOPRAY, HINDU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS