2.5 ரூபாய் குறைப்பு என்பது திட்டமிட்டு திசைதிருப்பும் செயல்: காங்கிரஸ்!

Home > தமிழ் news
By |

கடந்த ஆகஸ்டு மாதம் இறுதி வாரங்களில் தொடங்கிய, தொடர் அடைமழை போல உயர்ந்தது பெட்ரோலின் விலை. முன்பிருந்தவற்றை போல் சன்னமான விலையேற்றம்தான் என்றாலும், இம்முறை இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட லிட்டருக்கு 90 ரூபாய் வரை பெட்ரோல் விலை  கணிசமாக உயர்ந்தது. 

 

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது பற்றி கூறும்போது, இது வெறும் தற்காலிக உயர்வுதான் என்றும் விரைவில் பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளை உண்டாக்குவோம் என்றும் கூறினார். பிரதமர் மோடி கூறும்பொழுது, பேட்டரி கார் வாகனங்களையும், எத்தனால் எரிபொருள் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவிருப்பதாகக் கூறியிருந்தார். 

 

எனினும் இவற்றிற்கெல்லாம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அவசர காலத்தில் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதில் தொடர் சந்தேகங்கள் நீடிக்கச் செய்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் திடீரென பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.5 குறைந்துள்ளது. 

 

இது பற்றி பேசியுள்ள காங்கிரஸ், மக்கள் பெட்ரோலுக்கு செலுத்தும் பாதி பணத்தை மோடி அரசு எடுத்துக்கொள்வதாகவும், தற்போது நிகழ்ந்துள்ள இந்த லிட்டருக்கு ரூ.2.5 குறைப்பு என்பது அடுத்து வரவிருக்கும் 4 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறும் நோக்கில் நற்பெயரை வாங்கவும் அரசு தன் மீதுள்ள கறைகளை மறைக்கவும், திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திசை திருப்பும் செயல்’ என குற்றம் சாட்டியுள்ளது.

BJP, NARENDRAMODI, CONGRESS, RAHULGANDHI, PETROLPRICE, PETROLHIKE, INDIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS