சபரிமலை கெடுபிடி: ரஹானா பாத்திமா வீட்டில் தாக்குதல்.. திருப்தி தேசாய் கைது!

Home > தமிழ் news
By |

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக ஷிர்டிக்கு வரும் பிரதமர் மோடியிடம் நேரில் முறையிட முயன்ற பெண்ணியவாதி திருப்தி தேசாய் புனேயில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது பெண் போலீசாருக்கும் திருப்தி தேசாயின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

மகாராஷ்ட்ராவில் உள்ள சிங்கனாபுர் சனிபகவான் கோவிலில் பெண்களை அனுமதிக்க மறுத்தபோது தமது ஆதரவாளர்களுடன் சென்று கோவில் கருவறை புகும் போராட்டம் நடத்தியவர் திருப்தி தேசாய் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சபரிமலை அய்யப்பன் கோவிலிலும் பெண்களை அனுமதிக்க கோரி அவர்  போராட்டம் நடத்த திட்டமிட்டுருந்தார். இந்நிலையில் சபரிமலைக்கு சென்ற இரு பெண்களுள் ஒருவரான சமூக செயற்பாட்டாளர் ரஹானா பாத்திமா-வின் கொச்சியில் இருக்கும் வீட்டில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

 

இதுபற்றி பேசிய, ரெஹானா பாத்திமா, ‘என்னுடைய வீட்டாரும் நானும் ஆபத்தில் இருக்கிறோம். என் குழந்தைகளுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. காவல் துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளதாக கூறியதை நம்பி நான் சபரிமலையில் இருந்து திரும்புகிறேன்’ என்று பேட்டியளித்துள்ளார். மேலும் தான் இங்கு சமூக செயல்பாட்டாளராக வரவில்லை பெண் பக்தையாகத்தான் வந்ததாகவும் கூறியுள்ளார். 

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS