ஊடகத்துறையின் ‘உயரிய விருது’க்கு ‘உரியவராக’ தி இந்து குழும தலைவர் என்.ராம் தேர்வு!

Home > தமிழ் news
By |

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் இந்து பத்திரிக்கை குழுமத்தின் தலைவர் என். ராம் பெருமைமிகுந்த ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பத்திரிக்கைத் துறைக்கு அவர் ஆற்றும் தன்னிகரில்லாத பங்களிப்பை மனதில் வைத்து இந்த விருதை இந்திய பிரெஸ் கவுன்சில் வழங்க முன் வந்துள்ளது.

 

இந்திய பிரெஸ் கவுன்சில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பத்திரிக்கைத் துறைக்கு தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் இந்து பத்திரிக்கை குழுமத் தலைவர் என். ராம், ராஜா ராம் மோகன் ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய ஊடக தினமான நவம்பர் 16ம் தேதி இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஊடகக் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான போக்கை, கண்டிக்கும் வகையில், அண்மையில் நக்கீரன் இதழாசிரியர் கோபாலுக்காக குரல் கொடுத்தவர்  ‘தி இந்து’ என்.ராம் என்பது குறிப்பிடத்தகது. 

 

தேசிய அளவில் 2018ம் ஆண்டிற்கான இந்த விருதுக்கு பத்திரிக்கைத் துறையில் சிறந்து விளங்கும் பத்திரிக்கையாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இதில் 'ரூரல் ஜர்னலிசம்' என்ற பிரிவின் கீழ்’ தேஷ்பந்துவின் தலைமை செய்தியாளர் ரூபி சர்பார்,  டெய்லி புதாரியில் பணியாற்றும் ராஜேஷ் பர்சுராம் ஜோஷ்டே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் டெவலப்மென்டல் ரிபோட்டிங்  பிரிவின் கீழ் கேரள கௌமுதியின் இணை ஆசிரியர் வி.எஸ். ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் சுபாஷ் பவுல், ராஷ்ட்ரிய சஹாரா இருவரும் போட்டோ ஜர்னலிசம் -சிங்கிள் செய்தி பிரிவின் கீழ் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். போட்டோ ஜர்னலிசம் -போட்டோ பிரிவின் கீழ் டெல்லியில் இருந்து வெளிவரும் பஞ்சாப் கேசரியின் செய்தியாளர் மிஹிர்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

கார்ட்டூன்கள், கேலிச்சித்திரங்கள் பிரிவின் கீழ் ஹைதராபாத்தில் இருந்து வெளிவரும் நவ தெலுங்கானாவின் கார்ட்டூன் எடிட்டர் பி நரசிம்மா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பத்திரிக்கையாளர்கள், மூத்த எடிட்டர்கள் மற்றும் ஊடக நிறுவன உரிமையாளர்கள் மேலாளர்கள் கொண்ட ஜீரிகள் குழு விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

HINDU, THEHINDU, HINDURAM, NRAM, RAJARAMMOHANRAIAWARD, JOURNALISM, MEDIA, DELHI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS