2022-க்குள் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வீடு: பிரதமர் உறுதி!

Home > தமிழ் news
By |

ஷூர்டி சாய்பாபா கோவிலில் வழிபாட்டை முடித்த பிறகு, சொற்பொழிவாற்றிய பிரதமர் மோடி, வருகிற 2022-க்குள் இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் திட்டம் முழுமை படுத்தப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இதற்கு முன்பு இருந்து அரசுகள்  சுமார் 25 லட்சம் வீடுகள மட்டுமே கட்டித் தந்ததாகவும்,  எனினும் இந்த 4 ஆண்டுகளாக தனது அரசு ஏறக்குறைய 1 கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டித் தந்துள்ளதாகவும்,  இதனை காங்கிரஸ் செய்ய 20 வருடங்கள் ஆகியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.  அதுமட்டுமல்லாமல்,


முந்தைய அரசு தங்கள் குடும்பத்தின் பெருமையை நிலைநிறுத்துவதற்கு முயற்சி செய்ததாகவும், வாக்குகளை மட்டுமே இலக்காகக் கொண்ட காங்கிரஸ் எவ்வித முன்னேற்றத்தையும் செயல்படுத்தவில்லை என்றும், பாஜகவே இந்த 4 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க தீவிர நடவடிக்கைகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


2022-ம் ஆண்டு என்பது இந்தியா விடுதலை பெற்று 75-ம் வருடம் என்றும், அவ்வருடத்தில் அனைவருக்கும் வீடு திட்டம் முழுமை பெறும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.  எனினும் அவ்வருடத்துக்குள் நாடாளுமன்ற தேர்தல் நிகழும் என்பது கூடுதல் தகவல். ஆன்மீக நிகழ்வில் பேசுவதற்கு முன்னதாக சாய்பாபாவின் பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளிக்காசுகளை மோடி வெளியிட்டார்.

NARENDRAMODI, BJP, CONGRESS, INDIA2022, PRIMEMINISTER

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS