தெலுங்கானாவில்  2 நாட்களுக்கு முன்னால், இளம் பொறியாளர் பிரனய், அவரது மனைவியும் கர்ப்பிணியாக இருந்தவருமான அம்ருதாவின் கண்முன்னே, அம்ருதாவின் தந்தையினால் மருத்துவமனை வளாகத்தின் அருகே ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. வெவ்வேறு சாதியை சேர்ந்த பிரனய்-அம்ருதா ராவ் இருவரும் பத்தாம் வகுப்பில் இருந்து காதலித்து, தங்களது காதல் வீட்டுக்கு தெரிந்ததால், இருவரும் முடிவெடுத்து காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.

 

அதன் பின்னர் கணவரைப் பறிகொடுத்த அம்ருதா பிரனய்க்கு நீதி வேண்டும் என்கிற ஹேஷ்டேகில் முகநூலில் பக்கம் ஒன்த்றை தொடங்கி தனக்கான ஆதரவாளர்களை சேர்த்தார்.‌ மேலும் தொழிலதிபரின் மகளான அம்ருதா ‌ பணம் மற்றும் சாதி ஆகியவற்றின் அடிப்படையில் தன் காதலி திருமணத்துக்கு எதிராக நின்று தன் தந்தையை தன் கணவரை தன் கண் முன்னால் கொன்றதற்கு நீதிவேண்டி கோர்ட்வரை சென்றுள்ளார்.

 

இந்த நிலையில் அமிர்தாவின் தந்தையும் தொழிலதிபருமான மாருதி ராவ் தன் ஏழ்மையான மருமகனை கவுரவக் கொலை  செய்யச் சொல்லி கூலிப்படைக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் இந்த கூலிப்படையினருக்கு முன்பணமாக 18 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதும், முன்னதாக 2003இல் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் குஜராத் அமைச்சர் ஹரேன் பாண்டியாவின் கொலையுடன் சம்பந்தப்பட்ட கூலிப்படையினர்தான் இந்த கொலை சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

 

அமிர்தாவை பொருத்தவரை ஆணவ படுகொலைக்கு எதிராகவும் சமூக அநீதிக்கு எதிராகவும் தொடர்ந்து பல கருத்துக்களை, தான் தொடங்கியுள்ள முகநூல் பக்கத்தின் மூலமாக பகிர்ந்து வருவதோடு மறைந்த தன் இளம் வயது கணவரின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை, தொடர்ந்து போராடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

BY SIVA SANKAR | SEP 18, 2018 5:42 PM #AMRUTHAVARSHINIRAV #MARUTHIRAV #TALANGANA #MURDER #HONOURKILLING #PRANAY #ISI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS