இந்தோனேசியா.. நிலநடுக்கம், சுனாமிக்கு 832க்கும் மேற்பட்டோர் பலி!

Home > தமிழ் news
By |

இந்தோனேசியாவின்  சுலவேசி தீவு பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் முதலில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் 7.5 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


ஆனால் உடனடியாக எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட போது யாரும் எதிர்பாராத விதமாக கடலோர பகுதிகளை சுனாமி பேரலை தாக்கியது. சுமார் 2 மீட்டர் அளவிலான ராட்சஸ அலைகள் ஊருக்குள் புகுந்து, உயிர்களைக் குடிக்கத் தொடங்கியது.

 

லட்சக்கணக்கான மக்களை பாதித்த இந்த காலக்கட்டத்தை இந்தோனேசியா பேரிடராக அறிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் 832க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக இந்தோனேசியா பேரிடர் குழு தெரிவித்துள்ளது.

 

மேலும் தேசிய ராணுவ மீட்புப் படையினரைக் கொண்டு பலரையும் மீட்டு வருகின்றனர். இன்னும் பலர் அரசின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு, உடை, இருப்பிடத்திற்கு அவர்கள் சிரமபட்டுக் கொண்டிருப்பதாக வந்த தகவல்களை அடுத்து பலரும் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர்.

INDONESIAEARTHQUAKE, TSUNAMI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS