'கோலிவுட் டூ ஹாலிவுட்'... லாஸ் ஏஞ்சல்ஸில் 'தளபதி 63' படக்குழு!

Home > தமிழ் news
By |
'கோலிவுட் டூ ஹாலிவுட்'... லாஸ் ஏஞ்சல்ஸில் 'தளபதி 63' படக்குழு!

'தெறி','மெர்சல்' படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மிகப்பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

 

'தளபதி 63' என அழைக்கப்படும் இப்படத்தில் விஜய் டிரெய்னராக நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.

 

இந்நிலையில், லொகேஷன் பார்ப்பதற்காக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு படக்குழு சென்றுள்ளது. இயக்குநர் அட்லீ, ஒளிப்பதிவாளர் விஷ்ணு, கிரியேட்டிவ் புரொடியூஸர் அர்ச்சனா கல்பாத்தியுடன், அட்லீயின் மனைவி பிரியாவும் சென்றுள்ளார்.

 

இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அர்ச்சனா,''கோலிவுட் டூ ஹாலிவுட்,'' என, மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

 

VIJAY, NAYANTHARA, THALAPATHY63

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS