BGM BNS Banner

'விஸ்வாசம்' அப்டேட்டினைத் தள்ளிவைத்ததா படக்குழு?.. விளக்கம் உள்ளே!

Home > தமிழ் news
By |
'விஸ்வாசம்' அப்டேட்டினைத் தள்ளிவைத்ததா படக்குழு?.. விளக்கம் உள்ளே!

விஸ்வாசம் படம் குறித்து இன்று அப்டேட் கண்டிப்பாக வரும் என தல ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர். இன்று வியாழக்கிழமை என்பதும் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருந்தது.

 

ஆனால் படக்குழு டீசர் உள்ளிட்ட எந்த அப்டேட்களையும் வெளியிடவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் தல ரசிகர்கள் தங்கள் கோபத்தினை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

இந்தநிலையில் விஸ்வாசம் படக்குழு எதற்காக அப்டேட்டினைத் தள்ளி வைத்தது என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

 

இதுகுறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது,'' கஜா புயலால் மக்கள்  மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதனால் இன்னும் சில நாட்களுக்கு விஸ்வாசம் தொடர்பாக எந்த அப்டேட்டும் இருக்காது. டெல்டா பகுதிகளில் சற்று இயல்பு நிலை திரும்பியவுடன் விஸ்வாசம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும்,'' என தெரிவித்தனர்.

 

அஜித்,நயன்தாராவுடன் இணைந்து ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் விஸ்வாசம், பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS