Watch Video: அதே லுக் அதே ஸ்டைல்.. 'குட்டி தல'யைக் கொண்டாடும் ரசிகர்கள்!

Home > தமிழ் news
By |

சமீபத்தில் நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் கோவா சென்றார். அப்போது சென்னை ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலானது.

 

இந்த நிலையில் மீண்டும் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. கோவாவில் இருந்து சென்னை திரும்பிய அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

 

குறிப்பாக 10 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றில் அஜித், ஷாலினி, அனவுஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் தற்போது ஆத்விக்கின் புகைப்படத்தை, அஜித்தின் குழந்தை வயது புகைப்படத்துடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS