தயாரிப்பாளர் சங்க கட்டடம் பூட்டப்பட்ட விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Home > தமிழ் news
By |

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.  முன்னதாக தங்களையும் தங்கள் தயாரிப்பாளர்கள் சங்க ஊழியர்களையும் வேலை செய்ய விடாமல் எதிர் தரப்பு தடுப்பதாக டி.நகர் பாண்டி பஜாரில் புகார் அளித்திருந்த விஷால் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு சென்றார்.

 

இதனை அடுத்து, வெள்ளிக்கிழமை 7 திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில், தங்களுக்கு வேலை இருப்பதாகவும், அதனால் பூட்டியுள்ள தயாரிப்பாளர் சங்க கட்டடத்தை திறக்குமாறும் கேட்டுள்ளார். ஆனால் எதிர்தரப்பினர் ரிஜிஸ்டரரிடம் முறையிட்டதால் தற்காலிகமாக நேற்றையதினம் போடப்பட்ட அந்த  பூட்டினை திறக்க காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. 

 

இந்த நிலையில் உடைப்பதற்காக விஷால் முயற்சித்தபோது, முன்னதாகவே அங்கு வந்திருந்த காவல்துறையினர் விஷாலை, நீண்ட நேர வாக்குவாதத்துக்கு பிறகு கைது செய்தனர். அவருடன் சேர்ந்து அவரது ஆதரவாளரான நடிகர் மன்சூர் அலிகானும் கைது செய்யப்பட்டார்.

 

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் மீது திரைப்பட சங்கத்தின் பணம் ரூ.7 கோடி கைமாறியதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதோடு, அவர் பதவி விலக வேண்டும் என்றும் இயக்குநர் பாரதிராஜா மற்றும் ஏ.எல்.அழகப்பன் தலைமையிலான பலர் வலியுறுத்தியிருந்தனர். 

 

இந்த கைது பற்றி பேசிய விஷால், ‘திருட்டு பூட்டுக்கு காவல்துறையினர் காவல் காக்கிறார்கள். ஆனால் எங்கள் அலுவல் பணியைச் செய்ய விடாமல், தங்கள் பணியைச் செய்வதாக அவர்கள் சொல்கிறார்கள். இது நம்பத்தக்கதல்ல’ என்று கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட விஷால் சென்னை தியாகராய நகரில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். 

 

எனினும் அடுத்த கட்ட நடவடிக்கையாக தொடர்ந்து பிப்ரவரியில் நடக்கவிருக்கும் இளையராஜாவின் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தொடருவோம் என்றும், அதில் திரட்டப்படும் நிதியை, தயாரிப்பாளர்களுக்கு வழங்குவோம் என்றும் தொடர்ந்து தயாரிப்பாளர்களின் நலனுக்காகவே நாங்கள் இருப்போம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதேபோல் நீதிமன்றத்தை அணுகப்போவதாகவும்  கூறியிருந்த விஷால் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிஅன்றாட அலுவல்களை மேற்கொள்ள தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என அனுமதி வேண்டினர்.

 

சென்னை உயர்நீதிமன்றம் இதனை அவசர வழக்காக ஏற்று, விசாரித்தத பின்னர், தயாரிப்பாளர் சங்க அலுவலத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுவதற்கு உத்தரவிட்டது.

 

TFPC, VISHAL, TAMILNADU, CHENNAI, ACTOR

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS