இவங்க ரெண்டு பேரும் இந்திய அணியோட பொக்கிஷம்'...புகழ்ந்து தள்ளிய கடவுள்!

Home > தமிழ் news
By |

இந்திய அணி திறமையான வீரர்களின் கூடாரமாக மாறியுள்ளது பெருமையளிக்கிறது என இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் சுப்மன் கில்  ஆகியோரின் வரவு இந்திய அணிக்கு  மிகப்பெரிய தெம்பாக அமையும் என சச்சின் தெரிவித்துள்ளார்.

தற்போதைய இந்திய அணி குறித்து மிகவும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ள சச்சின்,'19 வயதே இந்த இளம் வீரர்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டாலும்,இக்கட்டான சூழ்நிலையினை சமாளிக்கும் திறன் இருவரிடமும் இருக்கிறது.19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன் பிரித்வி ஷாவின் வரவு,இந்திய அணிக்கு புதிய தொடக்க வீரர் கிடைத்துள்ளார் என்ற புதிய தெம்பு வந்துள்ளது.

அதே போன்று ரஞ்சி போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த சுப்மன் கில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட அழைக்கப்பட்டார். அவரும் தன்னுடைய பொறுப்பினை உணர்ந்து தன்னுடைய திறனை வெளிப்படுத்தினார்.பிரித்வி ஷா 8 வயதாக இருக்கும் போதே அவரின் திறன் குறித்து நன்றாக அறிவேன்.அதற்காக அவரை நான் அப்போதே பாராட்டி இருக்கிறேன்.இவர்கள் இருவர் மூலம் வருங்காலத்திற்கான சிறப்பான இந்திய அணியினை காணமுடிகிறது என சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

CRICKET, BCCI, SACHIN TENDULKAR, SHUBMAN GILL, PRITHVI SHAW

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS