என்னது? அனைத்து நெட்வொர்க்குகளிலும் இன்கமிங் காலுக்கும் இனி கட்டணமா?
Home > தமிழ் newsஜியோ சிம் கார்டுகளின் வரத்துக்கு முன்புவரை ஒரு வருடம் மற்றும் லைஃப்ட் டைம் வேலிடிட்டிகளைக் கொண்டவையாகத்தான் அனைத்து நெட்வொர்க்குகளின் சிம் கார்டுகளும் இருந்தன. அப்போது ஒருமுறை ரீசார்ஜ் அல்லது டாப்-அப் செய்தால் குறைந்தபட்சத் தொகை பிடித்தம் போக மற்ற தொகைகள் அவுட் கோயிங் கால்களை பேசுவதற்கு பயன்படும்.
ஆனால் பின்னாளில் அந்த ரீசார்ஜ்களுக்கும் வேலிடிட்டி நாட்களாக 28 நாட்கள் போன்ற கட்டுப்பாடுகள் (பேக்கேஜை பொறுத்து) முடிவு செய்யப்பட்டன. எனினும் குறைந்த பட்சம் ரீசார்ஜ் செய்யவேண்டிய தொகை என்பன போன்ற எந்த கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. ஜியோ சிம் கார்டின் வரத்துக்கு பின்னரே, இலவச இண்டர்நெட், இலவச கால்களுக்கான வசதிகள் தரப்பட்டன. அதனால் பலரும் அவுட் கோயிங் கால்களை பேசுவதற்கு ஜியோ சிம்மில் இருந்து மட்டுமே அழைக்கத் தொடங்கியதால் பொதுவான பிற நெட்வொர்க்குகள் நஷ்டத்தில் இயங்கத் தொடங்கியதாக அவை குற்றப் புகார்களை முன்வைத்துள்ளன.
மேலும் ஷேரிங் அடிப்படையில் பேசிக் சர்வீஸ் ஸ்டேஷனில் இருந்து நெட்வொர்க் அலைக்கற்றைகள் பிரித்துக்கொள்ளப்பட்டன. எனினும் தகவல் தொழில்நுட்பத் துறையின்படி ஆதார் அட்டைகளை இணைக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால் ஜியோவைப் போலவே மற்ற நெட்வொர்க்குகளும் ஆதாரை கட்டாயமாக இணைக்கச் சொல்லி வலியுறுத்தின.
இந்த நிலையில், நஷ்டத்தில் இயங்கும் அனைத்து நெட்வொர்க்குகளும், வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அதன்படி, அன்லிமிட்டெடு பேக் உள்ளவர்கள், மாதம் குறைந்த பட்சம் 35 ரூபாயும், அன்லிமிட்டெடு பேக் இல்லாதவர்கள் மாதம் குறைந்தபட்சம் 25 ரூபாயும் ரீசார்ஜ் செய்யவில்லை எனில், இன்கமிங் கால்களுக்கான வாய்ப்புகள் துண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கோவை பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஜீனியர் டெலிபோன் ஆபீசர் விஜய் சுந்தர் கூறியுள்ளார்.
OTHER NEWS SHOTS
'கேப்டன் சூழ்ச்சியுடன் செயல்படுகிறார்'...இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மீது பகிர் குற்றச்சாட்டு!
RELATED NEWS SHOTS
- இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் ஊழியர்கள் இருக்கும் நகரம் இதுதான்!
- இந்திய கிரிக்கெட்டின் ஹிட்மேன் ‘கேமிராமேனாக மாறிய மொமண்ட்’.. ட்விட்டரில் வைரலாகும் வீடியோ!
- 'அடுத்த வருஷம் மே மாசத்துக்குள்ள'.. இந்தியாவுல 50% ஏடிஎம்கள் மூடப்படும்!
- வாக்காளர்களுக்கு செருப்பும்; கடிதமும் கொடுத்து வாக்கு சேகரித்த விநோத வேட்பாளர்!
- குறைந்துள்ளதா பெட்ரோல்.. டீசல் விலை: இன்றைய நிலவரம்!
- தயார் நிலையில் ஜிசாட்-29: ‘செக்’ வைக்கும் கஜா புயல்!
- 4 முறை சதம் அடித்தும் கோலியின் சாதனைகளைத் தொட்டும் ரோகித் ஒரே நாளில் இரட்டை சாதனை!
- 130 வருடமாக பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து அசத்தும் கிராமம்!
- ‘அவர் சூப்பர் ஸ்டார்.. அவர் உள்ளவரை இதற்கு அழிவே கிடையாது: பிரபலம்!
- தட்டிவிட்டதால் செல்போனை பறிகொடுத்த ராகுலுக்கு சிவகுமார் சர்ப்ரைஸ் கிஃப்ட்!