தெலங்கானாவில் ஆளும் கட்சியின் சட்டப்பேரவையை கலைக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக தெலங்கானா, அமைச்சரவையில் ஒப்புதலின் பேரில் ஒரு மனதாக சட்டப் பேரவை கலைக்கப்பட்டது.


2014ல் ஆந்திராவிடம் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த பிறகு,  தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி சார்பில் சந்திரசேகர ராவ் ஆட்சி புரிகிறார். அடுத்த 2019ம் வருடம் ஏப்ரல் மாதத்துடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்படவிருப்பதாக அறியப்பட்டது.  இதற்கான பரிந்துரைக் கடிதத்தை ஆளுநர் நரசிம்மனை சந்தித்து கடிதம் அளிக்கிறார் முதல்வர் சந்திரசேகர ராவ், மாநில சட்டசபைத் தேர்தலுடன் மக்களவை பொதுத்தேர்தலும் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.


மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நிகழும்போது தெலுங்கானா சட்டப் பேரவை நிகழ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

BY SIVA SANKAR | SEP 6, 2018 5:25 PM #TELANGANA #NARASIMHAN #TELANGANAGOVERNOR #TELANGANACM #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS