சென்னையில் பொழிந்துவரும் மிதமான மழை; உள் தமிழகத்தில் கனமழை!

Home > தமிழ் news
By |

தென்மேற்கு வங்கக் கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வுநிலை நிலை கொண்டிருப்பதால் தமிழகத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக மழை பொழியும் என முன்பே கூறியிருந்த வானிலை ஆய்வு மையம்,  பின்னர், காற்றழுத்த தாழ்வுநிலையானது மேற்கு திசையில் நகர்ந்து சென்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளான கடலூர், திருவண்ணாமலை, நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழையும் பொழியும் எனவும் முன்னதாக சென்னை வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

 

சென்னையில் நள்ளிரவு முதலே சென்னை புறநகர் பகுதிகளில் இரவில் கனமழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான வளசரவாக்கம்,சிட்லபாக்கம், கொளத்தூர், அண்ணாநகர், மேடவாக்கம், தாம்பரம், கொளபாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. விட்டுவிட்டு பொழிந்துகொண்டிருந்த மழை காலைவரை தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கிறது. அடுத்த 2 நாட்களுக்கு மிதமான சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இருக்கலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

RAIN, HEAVYRAIN, GAJACYCLONE, CHENNAI, TAMILNADU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS