5,711 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அறிவிப்பு!

Home > தமிழ் news
By |

தமிழக அரசுப் பள்ளி மாணவிகளின் தற்காப்புக்காக கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ போன்ற பாதுகாப்புக்கலை பயிற்சிகள் பலவற்றையும் வழங்க உள்ளதாக கல்வி திட்ட இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இதனை பலதரப்பட்டோரும் வரவேற்றுள்ளனர்.

 

இளம் மாணவியர் பள்ளியிலும் பள்ளிக்கு வெளியிலும் பலதரப்பட்ட சூழலில் தங்களைத் தற்காத்துக்கொள்ள அவசியம் கருதி இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5,711 உயர்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு, வருகிற அக்டோபட் 22-ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட தொடங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிப்பதன் மூலமாக, அவர்களுக்குள் உடலளவிலும் மனதளவிலும் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை முழுவதுமாக நீக்கி அளிக்கப்படும் இதுபோன்ற முயற்சிகள், அவரக்ளின் தன்னம்பிக்கை மற்றும் சுய பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

TAMILNADU, SCHOOLSTUDENTS, KARATETRAINING, SELFDEFENCETRAINING, TNGOVTSCHOOLGIRLS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS