கரையைக் கடக்கும் கஜா புயல்: தமிழக மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Home > தமிழ் news
By |

கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 620 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே நவம்பர் 15 வியாழன் அன்று புயல் கரையை கடக்கும், கஜா புயல் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று தெரிவித்திருந்த இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் காரணமாக, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று கூறியது. 

 

இந்நிலையில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் கூறியது.

 

எனினும் கடலூர்-பாம்பன் இடைய புயல்  நவம்பர் 15 கரையை கடக்கும்போது மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் சென்னையில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் கஜா புயலின் வேகம் மணிக்கு 10 கிலோ மீட்டரில் இருந்து 12 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளதால் மேற்கு, தென்மேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் கஜா புயல் சென்னைக்கு அதிக மழையைக் கொடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

 

புயல் எச்சரிக்கை காரணமாக நவம்பர் 15-ம் தேதி நடக்கவிருந்த  திருவள்ளுவர் பல்கலைக் கழக தேர்வுகள் அடுத்த மாதம், அதாவது டிசம்பர் 15-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலை. இணைப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

HEAVYRAIN, RAIN, TAMILNADU, GAJACYCLONE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS