நூதன முறையில் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான ஐ-போன்கள் திருட்டு:சிக்கிய சென்னை கும்பல்!

Home > தமிழ் news
By |

ஐபோன்கள் என்பவை உயர்தர வாழ்வாதாரத்தின் ஒரு குறியீடாக மாறிவரும் நிலையில், அவற்றை பயன்படுத்துவதற்கான மக்கள் எல்லா விதங்களிலும் பெருகி வருவதை அடுத்து, ஐபோன்களுக்கு இருக்கும் டிமாண்ட்டினை பயன்படுத்தி நூதன கும்பல் ஒன்று ஐ-போன்களை திருடியதோடு, அவற்றின் பாகங்களை பிரித்து, வேறு செல்போன் பாகங்களுடன் கலந்து புதிய செல்போனையே தயாரிக்கின்றன. 

 

இந்த போன்களை திருடுவதற்கு ஒரு கும்பலும், இவற்றை மறு உருவாக்கம் செய்ய ஒரு கும்பலும், சென்னையின் பிரபலமான ரிச்சி தெரு மற்றும் பர்மா பஜார்களில் சந்தைப்படுத்துவதற்கு ஒரு கும்பலும் என அதிரவைக்கும் பின்னணியை, போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார் அப்துல் ரகுமான் என்பவர். 

 

கொடுங்கையூரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர், இந்த கும்பலிடம் வாங்கிய புதிய ஐபோனில் தனது சிம் கார்டை போட்டவுடன், தயாராக இருந்த போலீசுக்கு ஐஎம்இ நம்பர் மூலமாக தகவல் வர, வெங்கட்ராமனை விசாரித்தது மூலம் பர்மா பஜார் அப்துல் ரகுமானை கண்டுபிடித்துள்ளனர்.

 

திருட்டு செல்போன்களை மாற்றி புதிய செல்போன்கள் தயாரிக்கும் இவருக்கு பேட்டர்ன் லாக்-பாஸ்வேர்டு எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. லேப்டாப்’களை திருடி கைமாற்றிவிடும் இவரது அண்ணனும் இவரும் ஒன்றாக பிடிபட்ட போது, 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐபோன்களை திருடிய, இந்த செயல்களை எல்லாம் ஒப்புக்கொண்டதோடு இவர்களுடன் தொடர்புடைய கும்பல்களை அடையாளம் காட்டியுள்ளனர். 

IPHONE, CRIME, POLICE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS