தமிழ்நாடு: இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

Home > தமிழ் news
By |

நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்று துவங்குகிறது. இன்று தொடங்கி, வரும் நவம்பர் 30-ம் தேதி வரை மாணவர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நீட் எனப்படும் மருத்துவ நுழைவுக்கான இந்தத் தகுதித் தேர்வினை, ப்ளஸ் 2 மாணவர்கள் தாங்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக எழுதுகின்றனர். இதற்கான எதிர்ப்புகள் முதலில் வலுத்தாலும், பின்னர் தமிழ்நாட்டிலேயே நீட் தேர்வு வைக்குமாறு கோரினர். தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் பெருகின.  

 

முறையான கல்வி பயிலாமல் மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்வோர் கடந்த ஓராண்டில் தடை செய்யப்பட்டனர்.  இவற்றின் காரணமாக மருத்துவத்தில் அரசு அங்கீகாரம் பெற வேண்டிய அவசியமுள்ளதால், குறைந்த பட்சம் சித்த மருத்துவமும் அதிக பட்சம் அல்லோபதி மருத்துவமும் துறை சார்ந்த படிப்புகளாகின.

 

அதிலும் போலிகளைக் கட்டுப்படுத்துவதன் காரணமாக நீட் தகுதித் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்த தேர்வுக்கான ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

EXAM, CLASS12EXAMS, NEET, NEET EXAM, TAMILNADU, INDIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS