'ஹிந்தி தெரியாதா,அப்போ தமிழ்நாட்டுக்கு போ'...விமான நிலையத்தில் தமிழக மாணவருக்கு...ஏற்பட்ட அவல நிலை!
Home > தமிழ் newsஇந்தி தெரியாததால் தமிழ்நாட்டை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவர் குடியுரிமை அதிகாரியால் அவமானபடுத்தப்பட்ட சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஆபிரஹாம் சாமுவேல்.இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா செல்லவதற்காக மும்பை சத்ரபதி விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார்.அப்போது குடியுரிமை பணியில் இருந்த அதிகாரி ஒருவர் 'உனக்கு இந்தி தெரியாதா அப்படியென்றால் தமிழ்நாட்டுக்குப் போ' என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.
உடனே அங்கு நடந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் ட்விட் செய்திருக்கிறார்.தனது பதிவினை பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்,தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கும் டேக் செய்திருந்தார்.இந்த விவகாரம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.பலரும் இதுகுறித்து விவாதிக்க ஆரம்பித்தனர்.
இதனை தொடர்ந்து ஆபிரஹாம் சாமுவேலை அவமானப்படுத்திய அதிகாரி பணியிலிருந்து மாற்றப்பட்டார். அடுத்த சில நிமிடத்தில் அவருக்குக் குடியுரிமை சான்று வழங்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள க்ளாக்ஸ்டன் பல்கலையில் வேதியியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவரான ஆபிரஹாம்,இந்த விவகாரம் தொடர்பாக பல ட்விட்களை பதிவிட்டிருந்தார்.
அதில் ''அங்கிருந்த 3 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே அவ்வாறு நடந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.மேலும் தன்னை அவமானப்படுத்திய அதிகாரிக்கு நன்றாக ஆங்கிலம் தெரிந்திருந்ததாகவும்,என் கண் முன்பே வெளிநாட்டு பயணியுடன் அவர் ஆங்கிலத்தில் பேசியதை கண்டதாகவும் ஆபிரஹாம் பதிவிட்டிருந்தார்.
மேலும் இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். தமிழனாக இருப்பதில் இன்னும் பெருமைப்படுகிறேன். அதில், உங்களுக்கு ஏதும் பிரச்னை இருந்தால் நீங்கள் இந்தியர்களே அல்ல' என்று மற்றொரு ட்வீட்டில் சாமுவேல் சற்று கட்டமாக குறிப்பிட்டிருந்தார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘எவ்வளவு நேரமா போன் பேசுவ?’.. 16 வயது மகளுக்கு தந்தை கொடுத்த கொடூர தண்டனை!
- 'மைதானத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்த கிரிக்கெட் வீரர்'...பேட்டிங் செய்த போது நிகழ்ந்த சோகம்!
- Man Borrows Rs 6.5 Lakh From Girlfriend; Pays For 2nd Girlfriend's Abortion
- 15-Yr-Old Visually Impaired Girl Takes Down Molester In Local Train
- Man shows dead mother as alive to bag her properties; Arrested
- நாயை காப்பாற்ற முயன்ற தம்பியை, ஆத்திரத்தில் கொன்ற அண்ணன்!
- VP of tech company turns robber to lead lavish lifestyle
- Shocking - Man throws three puppies over 12-feet wall
- திருமணத்திற்கு 'செலவு செய்வதில்' அரச குடும்பத்தையே வீழ்த்திய அம்பானி!
- மனைவியின் சாவை ஆணவப்படுகொலை என சந்தேகித்த கணவரும் 2 மாதத்துக்கு பின் சடலமாக மீட்பு!