1000 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்:கனமழை பாதித்த கோபியில் அமைச்சர் ஆய்வு!

Home > தமிழ் news
By |

தமிழகத்தில் இன்று காலை முதல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. மேலும் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருவாரியான அளவில் சாரல் மழை பெய்து வருவதோடு கோபிச் செட்டிப் பாளையம் கனமழையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோபிச்செட்டிப் பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை காரணமாக சுமார் 1000 வீடுகளுக்குள் ஆங்காங்கே இருந்த பள்ளி நிலையங்களிலும் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இந்தாராநகர் குளம், கீரிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் பொழிந்த கனமழையால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்கிறார்.

HEAVYRAIN, TNFLOOD, GOBICHETTIPALAYAM, TAMILNADU, ERODEFLOODS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS