‘பலாப்பழம் கொடுத்த வனத்துறையினர்’, யானை சின்னத்தம்பியை பிடிப்பதில் ஏற்பட்ட பெரும் சிக்கல்!
Home > News Shots > தமிழ் newsகாட்டு யானை சின்னதம்பியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.
யானை சின்னதம்பியை பிடிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து வனத்துறையினர் சின்னத்தம்பியை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். கரும்பு காட்டுக்குள் யானை சின்னத்தம்பி இருந்ததால் வனத்துறையினருக்கு மயக்க ஊசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனை அடுத்து மருத்துவர் அசோகன் முதல் மயக்க ஊசியை யானை சின்னத்தம்பியின் மீது செலுத்தினார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதற்கு அடுத்து வனத்துறை ஆலோசகர் தங்கராஜ் பன்னீர்செல்வம் இரண்டாவது மயக்க ஊசியை யானை சின்னதம்பியின் மீது செலுத்தினார். அது சின்னதம்பியின் கால் பாதத்தில் குத்தியது. ஆனாலும் யானை சின்னதம்பி தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தான். அதனால் இரண்டாவது முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.
இதனை அடுத்து யானை சின்னத்தம்பி நன்கு பழகியிருந்த கோவை வனத்துறை ஊழியர்கள் மூலம் பலாப்பழம் கொடுத்து கரும்பு காட்டிலிருந்து வெளியே கொண்டுவர ஊழியர்கள் முயற்சி செய்தனர். கோவை வனத்துறையினர் பலாப்பழம் காட்டி அழைத்ததும் யானை சின்னத்தம்பி காட்டுக்குள் இருந்து வெளியே வந்தான்.
உடனே வனத்துறையினர் யானை சின்னத்தம்பி பலாப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மயக்க ஊசியை சின்னதம்பியின் மீது வெற்றிகரமாக செலுத்தினர்.
பின்னர் கும்கிகளின் உதவியுடன் யானை சின்னத்தம்பியை லாரியில் ஏற்றி, டாப்-சிலிப் வரகளியாறு பகுதியில் கூண்டில் அடைக்க கொண்டு செல்லப்பட்டுள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS STORIES