சேலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களை திறந்து வைத்து அவற்றை பார்வையிட்டார். பின்னர் சேலம் கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவனுடன் இறகு பந்து விளையாடினார். அந்த வீடியோ நேற்றைய தினம் வைரலாக பரவியது. 

 

இதேபோல் அவர், வாழப்பாடி அருகே உள்ள அயோத்தியாபட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுப்பூரில், 30 லட்ச ரூபாய் செலவில் இந்த பூங்காக்களுடன் சேர்த்து அம்மா உடற்பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்துள்ளார்.

 

சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி தலைமையில் நிகழ்ந்த இத்துவக்க விழாவில், உடற்பயிற்சி கூடத்துக்கு உள் சென்று அமைச்சர்கள் சூழ, உடற்பயிற்சி செய்யும் இடத்தில் அமர்ந்து எடப்பாடி பழனிசாமி, இரு கைகளையும் தோள்பட்டையையும் வலுப்படுத்தும் உடற்பயிற்சி உபகரணத்தை சற்று பயன்படுத்தி பார்த்துள்ளார். தற்போது இந்த வீடியோவும் செய்தி சேனல்களில் வைரலாகி வருகிறது.

BY SIVA SANKAR | SEP 1, 2018 12:53 PM #EDAPPADIKPALANISWAMI #CMPALANISWAMI #TNCHIEFMINISTER #EDAPPADIEXERCISING #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS