அதிதீவிர புயலாக வலுப்பெறும் கஜா: இன்று இரவு கரையை கடக்கிறது!

Home > தமிழ் news
By |

14 கி.மீ வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 23 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளதாகவும் சென்னைக்கு அருகே 328 கி.மீ, தொலைவில், நாகைக்கு அருகே 338 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை ஆவடி, பட்டாபிராம், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி பகுதிகளில் மிதமான மழையும், சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூரில், அடையாறு, சாந்தோம் பகுதிகளில் கனமழையும் பெய்தது. ஆனால் புயல் கரையைக் கடக்கும்போது சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

8 கி.மீ வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 14 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளது. கஜா புயல் இன்று  இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும். 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக கஜா வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதனை ஒட்டி சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்வதற்கு பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, போலீசார் மெரினா கடற்கரைக்கு வந்தவர்களை வெளியேறச் சொல்லி அறிவுறுத்தினர்.

HEAVYRAIN, RAIN, GAJACYCLONE, TAMILNADU, CHENNAI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS