சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (01.09.2018) சேலத்திலிருந்து கருமந்துறை சென்றார். முன்னதாக சேலம் அனுப்பூரில் 30 லட்சம் மதிப்புள்ள பூங்காக்களையும், அம்மா உடற்பயிற்சி நிலையத்தையும் திறந்துவைத்த முதல்வர் பழனிசாமி, இறகுபந்து விளையாண்டும், உடற்பயிற்சி செய்தும் தமிழக மக்களையே திரும்பி பார்க்க வைத்தார்.

 

அதன் பிறகு கருமந்துறை சென்ற எடப்பாடி பழனிசாமி, செல்லும் வழியில், அருணா என்ற மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வீட்டிற்கு சென்று, அவர்களின் கட்டிலில் அமர்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளவாறு பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மேலும் மலைவாழ் மக்களுக்குத் தேவையான  சிற்றுந்து வசதி, கல்வி, சுகாதார வசதி, பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தருவது உள்ளிட்ட நலத்திட்டங்களை அதிமுக செய்யும் என்று உறுதி அளித்துள்ளார். 

BY SIVA SANKAR | SEP 1, 2018 5:17 PM #EDAPPADIKPALANISWAMI #TAMILNADUCM #TNCHIEFMINISTER #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS