'நோட்டு கொடுத்து நோட்டாவை விட அதிக வாக்குகள் பெறுவது பெரிய விஷமல்ல'.. தமிழிசை!
Home > News Shots > தமிழ் newsபிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக மகளிர் அணி சார்பாக மதுரையில் இருசக்கர மோட்டார் வாகனத்தில் யாத்திரை மேற்கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மகளிர் அணியின் வரவேற்பை ஏற்று இருசக்கர வாகன யாத்திரையை துவங்கி வைத்து, அவர்களுடன் மோட்டார் வாகனத்தில் ஒரு ரெய்டும் சென்றுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் மோடியின் மதுரை வருகை குறித்து பேச ஆரம்பித்த தமிழிசை, தமிழகத்தில்- குறிப்பாக மதுரைக்கு மோடி வருகை தந்து போனதன் பிறகு, தமிழகத்தில் பாஜகவுக்கான தொண்டர்கள் அதிகரித்துள்ளதாகவும், அவர்கள் அத்தனை பேரும் தங்களுக்கான வாக்கு வங்கியாகவே மாறியுள்ளதாகவும் பெருமை பேசியுள்ளார்.
மேலும், மோடியின் வருகையை எதிர்த்து கண்டனம் செய்தவர்களைப் பற்றியெல்லாம் தங்களுக்கு கவலையில்லை என்றும், நோட்டு கொடுத்து நோட்டாவை விட வாக்குகள் அதிகம் பெறுவது ஒன்றும் தங்களுக்கு பெரிதான விஷயமல்ல என்றும் ஆனால் அப்படி வெல்ல வேண்டிய அவசியமும் தங்களுக்கு இல்லை என்றும் பேசினார்.
20-க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கு பெற்ற இந்த நிகழ்ச்சியில், பாஜக சார்பாக தமிழக மாநில மகளிர் அணி தலைவி விஜயலட்சுமி தலைமையிலான இந்த மகளிர் அணி, தல்லாகுளம் பெருமாள்கோயிலில் தொடங்கி உலக தமிழ்ச்சங்கக் கட்டடம் வரை வாகனத்தில் பயணம் செய்து தங்கள் யாத்திரையை நிறைவு செய்தது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS STORIES
- DMDK in talks with BJP to form alliance
- PM Narendra Modi inaugurates last stretch of Phase I of Chennai Metro
- 2 நாளைக்கு ஃப்ரீ.. சென்னை மெட்ரோ ரயிலில் பறக்கலாம்.. அசத்தலான ஆஃபர்!
- 'நீங்க உங்க வேலைய பாருங்க'..நாங்க எங்க வேலைய பாக்குறோம்!
- 'என்ன.. பய பப்ஜி விளையாடுறானா?’.. சிரிக்கவைத்த மோடி.. தெறிக்கவிடும் பதில்!
- ‘இந்து பெண்ணை தொடுபவர்கள் கையை இப்படி செய்யுங்கள்’.. அமைச்சரின் கருத்தால் சர்ச்சை!
- '21 ஆயிரம் கோடியா? 2 ஆயிரத்து 100 கோடியா'.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!
- 'அதை நிரூபிச்சா, பாஜகவில் சேர்ந்து மோசமான தண்டனைய அனுபவிக்கிறேன்’..உதய்நிதி!
- ‘43 வருஷ நண்பர்.. ஆனால் ஒருநாளும் அவர் டீ விற்று நான் பார்த்ததே இல்லை’!
- ‘சர்ச்சைக்குரிய ஓவியங்களால் பரபரப்பு’.. மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி!