சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள உரிமையாளர் குடியிருப்பு, வாடகை குடியிருப்புக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்கள் ஆகியவற்றிற்கான சொத்து வரியை 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தியிருந்தது தமிழக அரசு.


வரும் அக்டோபர் முதல் அமல்படுத்தப்படும் இந்த அரசாணைப்படி வாடகைக் குடியிருப்புகளுக்கு 100 சதவீத சொத்துவரி உயர்வு என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் மற்றும் பல மக்கள் குடியிருப்போர் நல அமைப்புகள் வாடகை குடியிருப்புக்கான சொத்துவரியை குறைக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.


இந்த நிலையில் வாடகை குடியிருப்புகளுக்கான சொத்துவரியை 100 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைத்து அரசாணை வெளியிடப்போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 26, 2018 6:32 PM #TAMILNADUGOVT #PROPERTYTAXHIKE #TAXHIKEREDUCED #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS