இயற்கை பேரிடரில் சிக்கித்தவிக்கும் கேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடியை நிதியுதவியாக அளிப்பதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கேரளாவிற்கு நிவாரணப் பொருட்களாக 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால் பவுடர், 1,500 லிட்டர் உயர்வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால், வேட்டிகள்,கைலிகள், 10,000 போர்வைகள், அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவக்குழுக்களும் அனுப்பிவைக்கப்படும்.

 

கடந்த 10-ம் தேதி முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடியை கேரளாவுக்கு நிதியுதவியாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.தற்போது அங்குள்ள பாதிப்பைக் கணக்கில் கொண்டு மேலும் ரூ.5 கோடி நிதியுதவியாக அளிக்கப்படும்,'' என தெரிவிக்கப்ட்டுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS