'புதிய காற்றழுத்த தாழ்வு நிலை'.. டிசம்பர் 15-க்கு பிறகு கனமழை பெய்யும்!

Home > தமிழ் news
By |

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை டிசம்பர் 9-ம் தேதி உருவாவதால் டிசம்பர் 15-க்கு பிறகு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில்,''தற்போதுள்ள காற்றழுத்த சுழற்சி படிப்படியாக செயலிழந்து வருகிறது. டிசம்பர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மட்டும் லேசான மழை இருக்கும். மற்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை எதுவும் இருக்காது.

 

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை டிசம்பர் 9-ம் தேதி உருவாக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே உள்ள காற்றழுத்த சுழற்சியுடன் இணைந்து இது வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அந்தமான் பகுதியில் தீவிரமடைந்து தாழ்வு மண்டலமாக, ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் 15-ம் தேதிக்கு பிறகு தமிழகம் முழுவதும் பரவலாக கன மழைக்கு வாய்ப்புள்ளது,'' என தெரிவித்துள்ளார்.

HEAVYRAIN, WEATHER, TAMILNADU, CHENNAI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS